பக்கங்கள்

திங்கள், அக்டோபர் 10, 2011

மரணம் எனது பார்வையில்



 மரணம் ....     
 .    நாம் சுவாசிக்க மறந்த தினம். 
 .   இத்துணைகாலம் நம்முடைய எல்லா   எண்ணங்களுக்கும் 
      தகுந்தாற்போல் தன்னை ஆட்படுத்திக் கொண்ட 
      நம்சரீரதிற்கான ஒரு பிரிவு உபச்சாரவிழா.

மரணம்....
எவரும் எதிர்கொள்ள 
    விரும்பாத ஒரு வினை..
நிச்சயக்கபடாத ஒரு நிகழ்வு.

இவ்வுலகில் பிறக்கும் எப்பால் இனத்தவரும் தம் மரணத்தை
ஏற்று கொள்ளவதில்லை.

சற்றே கற்பனை செய்து பாருங்களேன்...

நாம் பயணிக்கும் விமானம் திடீரென்று இரண்டாக பிளந்து,
ஒராயிரம் அடி உயரத்திலிருந்து நாம் கீழ் நோக்கி விழுந்தால்
எப்படி இருக்கும்?

மரண  பயத்தை ( தேதி  குறிக்கபட்ட மரண தண்டனை கைதியிடம்
கேட்டு பாருங்கள்)  ஒவ்வொரு நொடி பொழுதும் நமக்கு தெரிய படுத்தி கொண்டிருக்கும் நாம் இனிக்க இனிக்க வாழ்ந்த இதே உலகம், இல்லையா?

நம் கண் முன்னே நம் உயிர் பிரிவதை எதிர்கொள்ளும் சக்தி
நம்மிடம் இல்லை என்பது அப்பொழுதுதான் புலப்படும்.

இதே போல்....

உங்களுடைய ஆயிசு இன்னும் ஒரு வார காலமேயென்று
எவரேனும் கூறினால் உங்கள் மனநிலை தான் என்ன?
. நெஞ்சு பதபதைக்கும்.
. இருப்பதெல்லாம் இல்லாதது  போலவும், இல்லாதவையெல்லாம்
    இருப்பது போலவும் உள்ளூர  ஒரு உணர்வு பற்றிகொள்ளும்.
. அன்றுவரை சுவாசிப்பதையே உணராத நீங்கள் உணர முற்படுவீர்கள்.
. உடல் உறுப்புகள் அனைத்தும் இருப்பதாக உணர நேரிடும்.

    (ஒரு நாள் முழுவதும் நீங்கள் சுவாசிப்பதாகவும் எல்லா உறுப்புகளுமே
     உங்களுக்கு  இருப்பதாக  உணர்ந்து தான் பாருங்களேன் பார்க்கலாம்.
     அன்றைய பொழுது நரகமாக மாறிபோகும்.)
. இருக்ககூடிய நாட்கள் நம்மளுடையதாக இருக்காது.
. எவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ள இயலாது.
. உணவு என்ற ஒன்று அவசியம்தானா என்ற கேள்வி எழும்.
. உறக்கம் உங்கள் கைவசம் இல்லாமல் போகும்.
. பிடித்த அத்துனை விஷயங்களும், நபர்களும் நமக்கு பிடிக்காமல் 
    போகக் கூடும்.

இவை அனைத்தையும் விலக்கி  வைக்க, தனிமையை தேடி சென்றால்..

அந்த தனிமையும்  சற்று அதிகமாகவே மிரட்டும்.

மொத்தத்தில் எஞ்சிய சந்தோஷமான தருணங்களை இழந்து
நாம்  நாமாக இருக்க இயலாமல் போகிவிடும்.

ஒரு மனிதன் சந்திக்கும் மரணத்தை இவ்வாறெல்லாம் வகைபடுத்தலாம்.
.  வயது முதிர்வினால் ஏற்ப்படும் இயற்கை மரணம்.
.  விபத்து போன்ற  எதிர்பாராத மரணம்.
.  நோய்வாய்ப்பட்டு இரத்தல்.
.   கூட்ட நெரிசலில் உயிர் பிரிதல்.
.   இயற்கையின் சீற்றத்தினால் மரணத்தை எதிர்கொள்ளுதல்.
.   போர்களத்தில் உயிர் பிரிதல்.
.   விலங்குகளுக்கு பலியாகுதல்.
.   என்கவுன்ட்டர் போன்ற துப்பாக்கி சூட்டில் உயிர் விடுதல்.
.   கொலை செய்யப்படுதல்.
.   மரணதன்ன்டனை விதிக்கப்பட்டு உயிர் நீத்தல்.
.   கருணைக்கொலை செய்யப்படுதல்.
.   தற்கொலை செய்துக்கொள்ளுத்தல்.
.   சிசுக்  கொலை.
.   கருகலைப்பு.

நம் உயிர் பிரியும் நாளை முன்னதாகவே  நம்மால் கணிக்க இயலுமா?

சாத்தியமென்றால்....

நாம் அனைவரும் நம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு இறப்பு அழைப்பிதழை
அனுப்பி வைக்கலாம் அல்லவா!

ஜனனமும்,மரணமும் ஒரு வகையான நிகழ்வுகளே.

ஜனனம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும் சந்தொஷங்களுக்கிடையே 
அழுது கொண்டே இவ்வுலகிற்கு விருந்தாலியாக காலடி வைத்தல்  .

மரணம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும்  சொகங்களுக்கிடையே அமைதியாக இவ்வுலகிலிருந்து விடைபெற்று கொள்ளுதல்.

ஜனனத்தின் அழுகுரல் இவ்வுலகை கண்டு மிரளுவதர்க்கான வெளிப்பாடு.

மரணத்தின் அமைதி இவ்வுலகை விட்டு விடுதலையாகுவதர்க்கான வெளிப்பாடு.

ஜனனத்தை பெருமிதமாய் ஏற்றுக்கொள்ளும்  நாம் மரணத்தையும் அப்படியே ஏற்று கொள்வோமே!

நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளையும் மனதார நேசியுங்கள்.

மரணம் ஒரு போதும் உங்களை ஒரு கொடுவாவை கொண்டு மிரட்டாது.

மாறாக, அது ஒரு பூங்கொத்தை கொண்டு இனிதாய் வரவேற்கும்.




சனி, அக்டோபர் 08, 2011

அரசமரத்தடி ரகசியம்

புதிதாய் மணம் முடித்த பெண்கள் அதிகாலையில் அரச மரத்தை சுற்றுவது ஏன் தெரியுமா?

பெண்களின் கர்ப்பத்திற்கும்,அரசமரதிற்கும் ஒரு அறிவியல்   சார்ந்த தொடர்பு உண்டு.

அரசமரம் என்றாலே  நமக்கு நினைவுக்கு வருவது என்ன?

ஆம், உங்கள்  யூகம் சரிதான்.


முழுமுதற்கடவுளான விநாயகர்(பிள்ளையார்) தான்.

அதோடு,அரசமரத்தடியில் விநாயகருக்கு நேர் பின்புறம் இருக்கும் ஒரு கற்சிலை உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?

ஆம்,பின்னிய நிலையில்  உள்ள இரு நாக பாம்புகளை  உருவகபடுத்தும் அந்த  நாகதேவதை   சிலை வடிவத்தை தான் கூறுகிறேன்.
சற்றே ஞாபகப்படுத்தி பாருங்கள்...

இந்த  பின்னிய ரிப்பன் (double helix) வடிவமைப்பை
தான் நம் செல்லினுள்உள்ள ஒரு DNA பெற்றுள்ளது.

இந்த கற்சிலையை கொண்டுள்ள அரசமரத்திற்கும்,
மனிதகுலத்திற்கும்(குறிப்பாக பெண்களுக்கு)மறுக்க
முடியாத ஒரு தொடர்பு உண்டு.

அது பலருக்கும் நேரடியாக  சொல்லபடாத நம் முன்னோர்களால் கண்டறியப்பட்ட ஒரு அறிவியல் உண்மை.

நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பது  நம் நாட்டில் இன்றும் கிராமப்புறங்களில்(நகர்ப்புறங்களில் வெகு குறைவாக) தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கை பற்றி தான்.

இந்த கட்டுரையின் துவக்கத்தில் நான் கேட்ட கேள்வியை மீண்டும்  ஒருமுறை வாசித்துபாருங்கள்.

அரசமரத்திற்கும்,அதை சுற்றி வரும் பெண்களுக்கும் அப்படி என்ன தான்  தொடர்பென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

இங்கு தான் அந்த அறிவியல் உண்மை புதைந்து கிடக்கிறது.

நான் குறிப்பிட வருவது என்னவென்றால்...

அரசமரத்திலிருந்து வெளிப்படும் ஒரு மருத்தவ குணம் கொண்ட
வாயுவை அதிகாலையில்(மாசற்றதாக இருக்கும்)  சுவாசிக்கும்  பெண்களுக்கு  கருவுருதலுக்கான முயற்சி சற்றே  தீர்க்கமாக  அமையும் என்பது    மருத்துவர்களின்   கருத்து.


இந்த அறிவியல்  சார்ந்த உண்மையை நம் முன்னோர்கள் முன்பே கண்டுணர்ந்து புதிதாய் மணம்  முடித்த பெண்கள் அரசமரத்தை சுற்றும் வழக்கை உருவாக்கி உள்ளார்கள்.

அதிகாலையில் அரசமரத்தை சுற்றும் பெண்கள் அனைவரும்
வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல்  மனித செல்லினுள் காணப்படும்  DNA  வின்  பின்னிய ரிப்பன்  வடிவத்தை
(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால்  முழுமையான கற்பதிர்கான  சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.

இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள் என்பது என் அனுமானம்.ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு  வணங்கும்
பொது  DNAவின் வடிவம் அவர்களின்  மனதை ஆட்கொள்ளும் அல்லவா.

இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.

ஆனால்....

இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த
அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன்  மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின்  இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து
போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும்  வழங்க பட்டுள்ளது.

எனக்குள் ஏற்படும் ஒரு சந்தேகம் என்னவென்றால்....

DNA  வின் வடிவத்தை கண்டறிந்த வாட்சன் மற்றும் கிரிக் நம் தமிழ்நாட்டிற்கு ஒருமுறை பயணம் செய்திருபார்களோ!

நமது பொக்கிஷமான அரசமரத்தடி  ரகசியத்தை தெரிந்து கொண்டு தனது  கண்டுபிடிப்பை மேம்படுத்திருப்பார்களோ!

அப்படியானால் DNA  விற்கு உண்மையான வடிவம் கொடுத்தது நாம் தானோ!

அதாவது நம் முன்னோர்கள்!!!

நோபெல் பரிசு குழு இதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.






















ஞாயிறு, அக்டோபர் 02, 2011

தலையெழுத்தாக மாறிப்போன தலையாய எழுத்து

                                                             
ஜனிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் 
இவ்வுலகம் எப்படியென்று ஒரு போதும்
தெரிவதில்லை.

இவ்வுலகம்...
.சிகப்பு கம்பளம் விரித்து தன்னை மலர்
  தூவி வரவேற்க போகிறதா?
  அல்லது
.மர்மங்களை முன்னிறுத்தி தன்னை     
  மிரள வைக்க போகிறதா?
  இல்லை
.ஏதும்  புரியாத ஒரு காட்சிபேழையாய்  மட்டும் தன் முன் தோன்ற
  போகிறதா?

என்ற கேள்விகளுடனே  துவங்குகிறது அதன் பயணம்.
இக்கணம் , உள்ளூர  எனக்கு தோன்றுவது என்னவென்றால்...
"இது எதோ முகவரி இல்லாத ஒரு ஊருக்கு அவ்வுயிர்  செய்யும் ஒரு தலையாய பயணம் மென்று"

ஜனித்த காரணத்திற்கான ஒரு மாபெரும் தேடல் என்று கூட கூறலாம்.
. இந்த பயணத்திற்கான பயணச்சீட்டு எங்கே கிடைக்கும்?
. அதன் விலை தான் என்ன?
 . எங்கிருந்து  எப்பொழுது  புறப்பட வேண்டும்?
எவரிடம் அனுமதி பெறவேண்டும்?
என்ன உடை அணிய வேண்டும்?
. பயண நாட்களும், தூரமும்  தான் என்ன?
. பயணிக்க போகும் வாகனம் எப்படி இருக்கும்?
. தனியாக தான் பயணிக்க வேண்டுமா இல்லை எவரேனும்
    வழிகாட்டி  உண்டா?
. அவர் எப்படிபட்டவர் மற்றும்  என்ன மொழியில் பேசுவார்?
. சந்திக்க போகும் நபர்கள் எத்தனை ?
அவர்கள் அனைவரும் எப்படி இருப்பார்கள்?
. அவர்கள் அனைவரும் எப்படி நடந்து  கொள்வார்கள்?
.  பயணம் எப்படி இருக்கும்?
.  இடையே ஓய்வு உண்டா?
. ஓய்வு எடுக்கும் இடம் தான் எங்கே?
பயணத்தின் முடிவு எப்படி தான் இருக்கும்?

இப்படியாக ஜனிக்கும் உயிரின் ஆழ்மனதினுள்  தொடரும் அனைத்து கேள்விகளுக்கும்....

இப்பிரபஞ்சத்தை படைத்தவன் வாய் முகூர்த்தமாக பதில் கூறாமல்
ஜனிக்கும் உயிரை தாங்கும் சரீரத்தின்  தலையில் அவன் எழுதி வைத்தது தான் தலையெழுத்து.

இந்த தலையெழுத்து தான் இவ்வுலகில் ஒரு உயிர் ஜனித்த
காரணத்திற்கான தேடலைத்(அதன் வாழ்க்கையை) தீர்மானிக்கிறது.
ஜனனத்திற்கும் மரணதிற்குமான  கால அவகாசம் அதனிடமே உள்ளது.


அதன் கையில் ஒரு உயிரின் வாழ்கை என்பது கணிக்க முடியாத ஒரு சதுரங்க ஆட்டம் தான் இல்லையா? 

நிகழகூடியவை சந்தோஷமாக இருப்பதும் துக்கமாக இருப்பதும் தலையெழுத்தின் கையில் தான் உள்ளது.

ஏனோ தெரியவில்லை...
தனக்கு ஏற்படும் அனைத்து  துரதிஷ்டமான நிகழ்வுகளுக்கும்  மட்டும்  
தலையெழுத்தை காரணமாக குறிப்பிடும்போது, தனக்கு ஈற்படும்
அனைத்து சந்தோஷமான நிகழ்வுகளுக்கும் அதுவே காரணமென்று ஏற்று கொள்ள இந்த மனது முன்வருவதில்லையே. ஏன் ?

இந்த தலையெழுத்து என்ன நமக்கு துன்பத்தை மட்டுமே கொணர்கிறதா?
இல்லை,..

இன்பத்தையும் தான் என்பதை மறந்து விட கூடாது.

ஜனிக்கும் ஒவ்வொரு உயிரின் தலையிலும் படைப்பவன் எழுதும் தலையெழுத்து என்ன தெரியுமா?

"உன்னால் முடியும்" என்ற வலிமை பொருந்திய இரண்டெழுத்து
 மந்திர சொல்லை தான்.

இதை  தலையெழுத்து என்று குறிப் பிடுவதை விட  தலையாய எழுத்து என்று குறிப்பிடுவது பொருத்தமாக  அமையும்.

இங்கு ஒரு பொதுவான நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளிக்கு செல்ல தயாராக இருக்கும் சிறு குழந்தைகளை நாம்  சற்றே
வீட்டில் உற்று கவனித்தால் புலப்படும்.அவர்களுக்கு உயரத்தில் இருக்கும் பொருட்களின் மீதே நாட்டம் அதிகம்  இருக்கும்.தனக்கு அந்த உயரம் எட்டாததாக இருப்பினும் ஏதேனும் ஒன்றின் மீது  ஏறி நின்று உயரே தன்னை கவர்ந்த அந்த பொருளை கைகொள்ள முயற்சிப்பார்கள்.
ஏன் தெரியுமா?  உன்னால் முடியும் என்ற  தலையாய எழுத்து
அவர்களை உசுப்புவதால் தான்.

ஆனால்...

இதனை கவனிக்கும் தாய்மார்களோ  அவர்களின் முதுகில்
இரண்டுகொடுத்து உன்னால் முடியாது போ என்று 
அவர்களின்  முடியும் என்ற மந்திர  சொல்லைமுடியாது என்ற
எதிர்மறை சொல்லாக அந்த சிறு வயதிலேயே மாற்றி விடுகிறார்கள்.

இதே போல்,மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சிறு  குழந்தைகளை ஈர்க்கும் மற்றொரு பொருள் இருசக்கர வாகனம்.
தனது தந்தை இருசக்கர வாகனத்துடன் வெளியில் செல்ல முற்படும் பொது தானாக ஓடிவந்து ஏறி உட்கார்ந்துகொண்டு இரு கைபிடிகளையும் பிடித்துகொண்டு ஓட்டுவதற்கு முயற்சிப்பார்கள்.  உன்னால் முடியும் என்ற அந்த தலையாய எழுதுத்தின் உந்துதலால்,

ஆனால் தந்தைமார்களோ  அதெல்லாம் உன்னால் முடியாதென்று கீழே இறக்கி விடுவார்கள்.அங்கேயும் அவர்களின் முடியும் என்ற நம்பிக்கை முடக்கப்படுகிறது.

கால போக்கில் முடியும் என்ற தலையாய எழுத்து , முடியாது என்ற தலையெழுத்தாக மாறி போய்விடுகிறது.

அவர்கள் வளந்த பிறகு அவர்களால்முடியகூடிய 
அனைத்து விஷயங்களும் முடியாமலே போய்விடுகிறது.

இத்தனைக்கும் காரணமாக பெற்றோர்களே 
இருந்துவிட்டு குழந்தை வளர்ந்த பிறகு உன்னால் 
எந்த ஒரு விஷயமும்   முடிவதில்லையே  என்று
ஆதங்கப் படுவதில் எந்த ஒரு பிரயோஜனமும்
இல்லை என்பது என் பக்க வாதம்.

ஒரு கணம் அனைத்து பெற்றோர்களும் இதை
சிந்தித்து பாருங்கள் உங்கள் குந்தைகள் உங்கள்
வசப்படுவார்கள் எந்த வயதிலும்.