ஒருமுறை நான் என் நண்பர்
ஒருவருடன் தொலைபேசியில்
உரையாடிக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக
அவருடைய ஏழு வயது மகள் என் நண்பர் கையிலுள்ள தொலைபேசியை
பிடுங்கிக்கொண்டு என்னுடன் உரையாட ஆரம்பித்தாள்.
அவருடைய ஏழு வயது மகள் என் நண்பர் கையிலுள்ள தொலைபேசியை
பிடுங்கிக்கொண்டு என்னுடன் உரையாட ஆரம்பித்தாள்.
என்னை ஒருமுறை கூட நேரில் பார்த்திறாத அவள்
எந்த ஒரு சலனமோ,கூச்சமோ இல்லாது சரளமாக உரையாடினாள்.
நான் மெய்சிலிர்த்து போனேன் அவள் என்னைப்பற்றி
நேர்த்தியாக விசாரித்ததை எண்ணி.
பிரமிப்போடு அவளிடம் கேட்டேன்,
”நீயோ என்னை ஒருமுறை கூட பார்த்ததில்லை.
நான் எப்படி இருப்பேன்?
சொல்லு பார்க்கலாம்”
என்றேன்.
அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
“ மாமா நீங்க எப்படி இருபிங்கன்னா...
ரொம்ப உயரமா!
ஒயிட்டா!
தலையில நிறைய முடியோட!
பாக்றதுக்கு அஜித் மாதிரி! “
முரண்பட்டு
போனேன் அவளுடைய வார்த்தைகளை கேட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக