ஒவ்வொரு நாளும் எனது பணி முடிந்ததும்
எனது கால்கள் என்னிடம் சிறிதும் அனுமதி கேட்க்காமல் வேகமாக
நான் பணி புரியும் கல்வி நிறவனத்தின் எதிரே உள்ள டீ கடையில்
தான் போய் நிற்கும் .
என் உதடுகளோ என்னை கேட்காமல் டீ கடைக்காரரிடம் ஒரு கப்
சுடு தண்ணி போடச்சொல்லி சாந்தமாய் முனுமுனக்கும்.
அவர் கடை காபியை நான் அப்படிதான் கூறுவேன்.
எனது வலது கை தானாகவே "முறுக்கை "தேடிச்செல்லும்.
மாலையில் காபியுடன் முறுக்கும் சேர்த்துக்கொள்வது எனது வழக்கம்.
ஒரு கையில் காபி ,மற்றொரு கையில் முறுக்கு.
என் மனம் லயத்துப்போகும் இன்றைய பனி முடிந்ததற்கான ஒரு பெரு மூச்சுடன்.
அன்று மாலை ஏனோ என் மனம் லெமன் டீ குடிக்க தூண்டியது.
அதற்காக,டிப்டாப் டீ கடைகள் உள்ள பக்கத்துக்கு ஊரான பவானிக்கு
எனது இருசக்கர வாகனத்தில்சுமார் பதினைந்து நிமிடங்கள் பயணித்தேன்.
கண்ணில் பட்டது அந்தியூர் முக்கில் உள்ள வேலா பேக்கரி.
உள்ளே சென்று மாஸ்டரிடம் "ஒரு லெமன் டீ" என்றேன் சன்னக்குரலில்.
பின்பு ,கடைக்கு வெளியே பார்த்தவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.
என் கண்கள் வெளியே போவோர் வருவோர்களை நோட்டமிட்டு
அவர்களின் நடை உடை பாவனைகளை களை அளவிட்டுக்கொண்டிருந்தது.
எனக்குத் அதுவரை தெரியவில்லை அவர்களில் ஒருவர் தான்
என் மனதிற்கு அன்று சாட்டையடி கொடுக்கப் போகிறார் என்று.
சற்றும் எதிர் பாராமல் நடந்தேறியது அந்த நிகழ்வு.
ஆம்,என் கண்ணில் பட்டார் ஒரு மூதாட்டி.
இல்லை.அவர் கண்ணில் நான் பட்டேன் என்பது தான் சரியானது.
பஞ்சுமிட்டாய் தலை,ஒரு கையில் அழுக்கு துணி மூட்டை,மறுக்கையில் ஊன்றி
நடக்க ஒரு தடி,கண்களில் ஒரு சோகம்,விடைகொடுக்க இருக்கும் சரீரம்.
ஏனென்று தெறியவில்லை,ஒரு கணம் உற்று பார்த்துவிட்டு படியேறி பேக்கரிக்குள்
என் அருகே வந்தார்.
ஒருகணம் தடுமாறிய நான் சில்லறை எதிர்ப்பார்க்கிறாரோ என்று
எண்ணி இரக்கப்பட்டு கையை என் சட்டை பையினுள் விட்டேன்.
சில்லறையுடன் அவர் பக்கம் திடும்பினேன்.
ஆனால்...
அவரோ என்னை கடந்து சென்று மாஸ்டரிடம் சில்லறை கொடுத்து
ஒரு கப் டீ கேட்டார்.
என் புத்திக்கு தெரியவில்லை அவருடைய தேவை சில்லறை அல்ல
ஒரு கப் டீ தான் என்று.
ஊடே, நான் கேட்ட லெமன் டீ என் மேஜைக்கு வந்தது.
ருசிப்பார்க்க தவித்தன என் உதடுகள்.
நானும் தாமதிக்காமல் குடிக்க தயாரானேன்.
மீண்டும் அதே மூதாட்டி என் அருகில் தான் வாங்கிய ஒரு கப் டீ யுடன்.
ஏதும் பேசாமல் என்னிடம் நீட்டினார்.
நான் வாங்கிக்கொள்ள தயங்கினேன்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை மேஜையின் மீது வைத்து விட்டு
என்னிடமிருந்து விடை பெற்றறார்.
என்னைச் சுற்றி இருந்தவர்களின் பார்வை என் மீது பற்றிகொண்டது
சிறுது நேரம்.
சாட்டையால் என்னை அடைத்தது போல இருந்தது எனக்கு.
ஆம்,பிச்சை கொடுக்க போன நான் பிச்சைகாரனாகிப் போனேன்.
அக்கணம் நான் அப்படி எண்ணியது தவறு தான்.
பிறகு ஏன் அவர் எனக்கு டீ வாங்கி தரவேண்டும்?
என்னுள் எழுந்த இந்த கேள்விக்கு பதில் தான் என்ன.
தேடுகிறேன் இன்னும்...
அருமை
பதிலளிநீக்கு""ஆம்,பிச்சை கொடுக்க போன நான் பிச்சைகாரனாகிப் போனேன்.""
பதிலளிநீக்கு""என்னுள் எழுந்த இந்த கேள்விக்கு பதில் தான் என்ன.
தேடுகிறேன் இன்னும்...""
இறைவன் பதில் தருவார் ,நண்பரே !
super vidhyasama eruku
பதிலளிநீக்கு