பலமுறை செய்தாலும் வெறுக்காத என் சைக்கிள் பயணம்.
. இதுவரை நான் அணியாத ஜீன்ஸ் பேன்ட்.
பலமுறை அணிந்தாலும் எனக்கு பொருந்தும் காட்டன்
பேன்ட்.
பேன்ட்.
. இதுவரை நான் பார்க்காத டார்ஜிலிங்.
பலமுறை பார்த்தாலும் என் கண்ணுக்குளே நிற்கும் ஊட்டி.
. இதுவரை எனக்கு கிட்டாத விஞ்ஞானப் பணி .
பலமுறை என்னை மேம்படுத்தும் இப்போதுள்ள கற்பிக்கும் பணி.
.இதுவரை நான் நேரில் பார்க்காத சூப்பர் ஸ்டார்.
பலமுறை பார்த்தாலும் நான் சலிப்படையாத எனக்கு மிகவும்
நெருக்கமானவர்கள் .
நெருக்கமானவர்கள் .
.இதுவரை நான் முழுமையாக கற்றுக்கொள்ளாத தேசிய மொழி.
பலமுறை பேசினாலும் என்னை மேலும் ஈர்க்கும் என் தாய் மொழி.
.இதுவரை நான் வரையாத மைசூர் கண்ணாடி ஓவியம்.
பலமுறை வரைந்தாலும் என்னை ஆச்சரியப்படுத்தும் தஞ்சாவூர் ஓவியமும்.
.இதுவரை நான் வெளியிடாத புத்தகம்.
பலமுறை எழுதினாலும் புத்துணர்வு ஊட்டும் நான் எழுதும் இடுக்கைகள்.
இதையும் தாண்டி...
.எழுந்தே ஆகவேண்டும் என்று தெரிந்தும் எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும்
கூடுதலான இரண்டு நிமிட உறக்கம்.
.உறங்கி எழுந்த பின்னும் படுக்கையை விட்டு நகராமல் உருள வைக்கும்
பாம்புச் சோம்பல்.
. பல் துலக்காமல் அருந்தும் ஒரு கப் காபி.
.தலைப்புச் செய்திகள்.
. குளியலறையில்,எனக்கே தெரியாமல் என்னை முணுமுணுக்க வைக்கும்
ரஹ்மானின் பாடல்கள்.
ரஹ்மானின் பாடல்கள்.
.என்னுடைய காலை பரபரப்பில் எப்படியும் தோற்கப் போகிறோமென்று தெரிந்தும் என்னுடன்
மல்லுக்கட்டும் கடிகார முள்.இதுவே மறுநாளும் தொடருமென்ற வெற்றிக் களிப்பில்
என் உதட்டோரப் புன்னகை.
மல்லுக்கட்டும் கடிகார முள்.இதுவே மறுநாளும் தொடருமென்ற வெற்றிக் களிப்பில்
என் உதட்டோரப் புன்னகை.
.மித ஓட்டத்தில் நகர பேரூந்தைப் பிடித்து படிக்கட்டில் நின்று கொண்டு முகத்தில் காற்று பட
செய்யும் ஒய்யாரப் பயணம்.
. வழியில் என்னை நிலைக்கொள்ளாமல் செய்யும் பிண ஊர்வலத்தின் முன் அரங்கேறும்
நிலையில்லா தமிழகத்து சால்சா நடனம்.
நிலையில்லா தமிழகத்து சால்சா நடனம்.
. மதிய உணவாக எப்பொழுதும் புளி கொழம்புச் சாப்பாடு முட்டை ஆம்லேட்டுடன் .
.மாலையில் ஒரு கப் காபியுடன் முறுக்கு.
.இரவில் சப்பாத்தி தொட்டுக்கொள்ள ஊறுகாய் .
wow fantastic sir
பதிலளிநீக்கு