மனித உணர்வுகளுக்கான தீவு.
அன்பு ,செல்வம் ,அழகு , மகிழ்ச்சி போன்ற
மனித உணர்வுகள் மட்டுமே குடியிருந்தன.
ஒரு நாள்...
அந்த தீவு மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது.
ஒவ்வோர் உணர்வும் படகு செய்து கொண்டுப் புறப்பட்டன .
அன்புக்கு மட்டும் படகு இல்லை .
"செல்வமே! என்னை ஏற்றிக்கொள்வாயா?" அன்பு கேட்டது .
"என் படகில் நிறைய தங்கம்,வைரம் மற்றும் பணம் இருக்கிறது
உனக்கு இடம் இல்லை"என்று செல்வம் சென்றது .
"அழகே ! என்னை ஏற்றிக்கொள்வாயா ?" அன்பு கேட்டது.
" நீ ஈரமாய் இருக்கிறாய் என் படகின் அழகு போய்விடும்".
என்று அழகும் சென்றது.
கடைசியாக...
"மகிழ்ச்சியே! நீயாவது என்னை ஏற்றிக்கொள்வாயா ?" அன்பு கேட்டது.
மகிழ்ச்சியின் காதுகளில் அது விழவே இல்லை.
அன்பு தவித்தது தனிமையில்.
ஒரு படகு அன்புக்கு அருகே வந்து நின்றது.
"ஏறிக்கொள் அன்பு !" என்றது ஒரு முதிர்ந்தக் குரல் .
கரையோரம் இறங்கியதும்,அன்பு முதிர்ந்தக் குரலிடம் கேட்டது
"நீங்கள் யார்?" என்று .
. "நான் தான் காலம்!" என்று பதில் வந்தது.
ஆம்...
அன்பின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக