பக்கங்கள்

புதன், செப்டம்பர் 21, 2011

விதியின் விளையாட்டு



அன்று  சொர்க்கத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் கலை கட்டியிருந்தது.
   
அந்த ஐந்து  நட்சத்திர  ஹோட்டலின் போர்டிகோ(முகப்பு வாயில்) முழுவதும் ஏகபோக ஆரவாரத்துடன் ஆடம்பர உடை சகிதமாக காட்சியளித்தார்கள்   உலகின்(பெரிய மற்றும் சிறிய )கடவுள்கள் அனைவரும்.

அன்றைய தினம் பிரம்மா(ஆக்கும்கடவுள்)
தலைமையில் ஹோட்டலின் கான்பெரென்ஸ் ஹாலில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது(அப்படி அவர்களுக்குள் என்ன தான் பிரச்சனையோ அந்த கடவுள்களுக்கு  தான் வெளிச்சம்).

ஒவ்வொரு  கடவுளும் தங்களுடைய வாகனத்தை அருகாமையில் பார்க் செய்து விட்டு பரபரப்பாக கூட்டம் நடக்கும் ஹாலை நோக்கி விரைந்தார்கள்.

இந்த அவசர கூட்டம் பற்றிய விஷயத்தை   சொர்க்கத்தில் உள்ள ஒரு ஆருயிர் நண்பன் எனக்கு மின்னஞ்சல்  மூலமா தெரிய படுத்த.
உடனே ஹோட்டல் லீ மெரிடியன்(சொர்க்கதில்உள்ள பிரான்ச்)
முகப்பு  வாயிலுக்கு  படையேடுத்தேன். 

கூட்டம் இன்னும் 1௦ நிமிடங்களில் துவங்க போகும் தருணம்.

ஒரு சில கடவுள்கள் என் கண்ணில் தென்பட்டார்கள்.

ஆம்....... 

விநாயகர் தன்னுடைய மூஞ்சிரு வாகனத்தை பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

மதுரை மீனாட்சி தன்னுடைய பச்சைக்கிளி வாகனத்தை  பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

கூட்டம் துவங்க இன்னும் 5  நிமிடங்களே உள்ள தருணம்.

கடைசியாக கம்பீரமாக உள்ளே வந்த எமதர்மன் தன்னுடைய எருமை வாகனத்தை பார்க் செய்யும் போது அருகே நின்ற பச்சைக்கிளியை ஒருமுறை நக்கலாக பார்த்து சிரித்து விட்டு விரைந்தார் தனது  
இருக்கையை ஆட்கொள்ளவதற்கு. 

ஆனால் இங்கு மனதினுள் ஒரு பதபதைப்பு எற்பட்டது  பச்சைகிளிக்கு.
ஆம் அதற்கு தெரியும் எமதர்மன் நக்கலாய் சிரித்தால் மரணம் உடனே அழைக்கிறது என்று.

ஒரே இடத்தில் நிம்மதியாக  இருக்க முடியாமல் இங்கும் அங்குமாக அலாவிகொண்டிருந்தது அந்த அற்ப உயிரி அடுத்து தனக்கு என்ன நிகழ போகிறது என்று தெரியாமல்.

தன்னை இந்த குழப்பமான சூழலிருந்து விடுவித்து கொள்ள தனது எஜமான் மதுரை மீனாட்சியின் வரவிற்காக காத்து கொண்டிருந்தது...

கூட்டம் இனிதே முடிவுற வெளியே வந்த  மீனாட்சியிடம் தனது
நிலையை கண்ணீர் ததும்ப விளக்கியது பச்சைக்கிளி.

நிலைமையை அறிந்த மீனாட்சி உடனே அங்கு வந்த சித்திரகுப்தனிடம் கிளியை பார்த்து எமதர்மன் நக்கலாய் சிரித்ததன்   காரணம் கேட்டதும்,வெகுண்டாள் மீனாட்சி.

தனது வாகனமான பச்சைகிளியின் விதியானது(உயிர் இன்னும் சில
வினாடிகளில்முடிய போகிறது)முடியும் தருவாயில் 
இருப்பதை தன் குறிப்பேட்டில் பார்த்து  சித்திரகுப்தன் கூறியதுதான் காரணம்..

தனது வாகனத்தை எமன் சீண்டுவதா என்று கர்ஜித்து கொண்டு,எமன் வந்து பச்சைகிளியின் உயிரை எடுக்கும் முன் அதனை பல ஆயிரம்  
மைல்களுக்கு  அப்பால் இருக்கும் ஒரு  மலைஅடிவாரத்தில் கொண்டு
போய் மறைத்து வைத்தாள் மீனாட்சி.ஏனெனில் சில நிமிடங்களே இருக்கும்  நிலையில் எமனால் அவ்வளவு நெடுந்தொலைவிற்கு
பயணித்து பச்சைகிளியை கண்டு கொள்வதற்குள் அதன் விதி காலம் முடிந்து உயிர்பிழைக்கும் அல்லவா.

நிம்மதி பெருமூச்சுடன் நின்று கொண்டிருத்த மீனாட்சிக்கு 
அருகே மௌனமாய் வந்து நின்றார் எமதர்மன்.

கோபமாய் எமனை எதிர்நோக்கிய மீனாட்சி தன் வாகனத்தை பார்த்து ஏளனமாய் எள்ளி நகைத்தன் உள் அர்த்தம் வினவினால்.

மீண்டும் மெல்லியதாய் நகைத்து கொண்டு எமன் கூறினான்,

"அன்னையே உங்கள் வாகனத்தை நான் பார்த்த பொழுது அதன் தலை விதி எனக்கு சுட்டி காட்டியது என்னவென்றால்..இன்னும் சில நிமிடங்களில்.பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் 
ஒரு மலையடிவாரத்தில் ஒரு  பூனையால் கடிபட்டு  உங்கள் வாகனமான பச்சைக்கிளி உயிர் நீக்க போகிறதென்று"

நான் நகைததற்கு காரணம் உங்கள் வாகனமான பச்சைக்கிளி  இருப்பதோ இங்கே .பூனை இருப்பதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்.சொற்ப கால இடைவெளியில் இது
எப்படி சாத்தியப்படும்.ஆனால் தாங்களே அதை சாத்திய படுத்திவிட்டீர்கள்.

வார்த்தைகளின்றி உறைந்து நின்றாள் சக்தியின் உருவான மீனாட்சி.

இது தான் விதியின் வாய்க்குள் நாமே  தலையை விடுவதோ!

இது தான் விதியின் விளையாட்டோ!

இதற்கு கடவுள் ஒன்றும் (விதி)விலக்கு அல்ல... 






திங்கள், செப்டம்பர் 19, 2011

பழக்க வழக்கங்கள்

வாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?


சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.

வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?

இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.

முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?

உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

கனவுகள்...


கனவுகள் நம் வாழ்க்கையின்
மிச்சங்களா?

நம் உள்மனத்தின் பிரதிபலிப்பபா?

நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம்
அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறதா?

கனவுகளில் வண்ணங்கள் உண்டா?

கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா?

ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ‘ நான்ரெம்’ எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.

[இயற்பியல் பயின்ற நான் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது மற்றும் பேசுவது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அடிப்படையில் சைக்கலாஜி  படிக்கும் ஆர்வம் இயற்பியல் படித்தவர்களுக்கு  கொஞசம் அதிகம் தான் என்பது என் கருத்து]

என் பார்வையில் கனவு என்பது...

இரவின் கருப்புத் திரைப்படங்கள்...

கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். ..

உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்…..

ஆம்...

ஒவ்வொரு  இரவிலும் நாம் உறங்கிய பிறகு நம் மூளையானது  அன்று காலை எழுந்தது முதல் உறங்க செல்வதற்கு முன் வரை நாம் செய்த அணைத்து  நிகழ்வுகளையும் மீண்டும் ஓட்டிபாற்கும்...
இந்த கருப்பு திரை படங்களுக்கான காட்சிகளை அரங்கேற்றம் செய்வது
நமது ஆன்மா தான்.
  

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

நம் மனதிற்கு இரண்டு நிலைகள் உண்டு...

நம் மனதிற்கு இரண்டு  நிலைகள் உண்டு...

1.உணர்வு நிலை.

2.குண நிலை.

உணர்வு என்பது மனதின் தற்காலிக நிலை.
குணம் என்பது மனதின் நிரந்தர நிலை.


நம் மனதானது  தற்காலிக நிலையில் சஞ்சலிக்கும் பொழுது தான்
சந்தோசம்,துக்கம்,விருப்பு,வெறுப்பு,கோவம்,பசி போன்ற
உணர்வுகள் நமக்கு வெளிபடுகின்றன.
நம் மனதானது நிரந்தர நிலையில் சஞ்சலிக்கும் பொது தான் நன்னடத்தை,தீயநடத்தை,சந்தேகம் கொள்ளுதல்,
அன்பாக நடந்துகொள்ளுதல் போன்றவைகள்  குணங்கள் நமக்கு வெளிப்பாடுகின்றன.

எப்பொழுது  ஒரு உணர்வானது மீண்டும் மீண்டும்  பல தருணங்களில் ஒரு மனிதனுக்கு எட்டிபார்கிறதோ அது கால போக்கில்   அவனுடைய குணமாக மாற கூடும்.

இங்கு நான் கேட்க விரும்பிகிற விஷயம் என்னவென்றால் கோவம்,வெறுப்பு, போன்றவற்றை  குணமாகிக்  கொண்ட மனிதன் ஏன் சந்தோஷத்தை ஒரு குணமாக மாற்றி கொள்ளவில்லை  இன்னும்?

இந்த  நிலை நீடித்தால் நம் அடுத்த சந்ததியர்கள் சந்தோசம் என்பது
இப்படி தான் இருக்கக்கூடும்  என்று அருங்காட்சியகத்தில் சென்று தான் படைப்புகள்,ஓவியங்கள் மற்றும் சிலைகள் வாயிலாக தெரிந்து கொள்ள கூடும்.
அனைவரும் சிரிக்க(புன்னகைக்க)  கற்றுகொள்ளுங்கள்.


புதன், செப்டம்பர் 14, 2011

ஒரு துளி...

ஒரு துளி விந்து.. 
ஒரு துளி குருதி...
ஒரு துளி வேர்வை ...
ஒரு துளி கண்ணீர் ..
ஒரு துளி சிறுநீர்...
ஒரு துளி பால்...
ஒரு துளி மோர்...
ஒரு துளி தயிர்..
ஒரு துளி பழரசம்...
ஒரு துளி தேன்...
ஒரு துளி  குழம்பு...
ஒரு துளி  பேனா மை...
ஒரு துளி அமிலம் கரைசல்...
ஒரு துளி கார கரைசல்...
ஒரு துளி உப்பு கரைசல்...
ஒரு துளி நீர்...
ஒரு துளி மழை....
ஒரு துளி விஷம்...
ஒரு துளி மதுபானம்...
ஒரு துளி  சர்க்கரை பாகு...
ஒரு துளி சூப்....
ஒரு துளி நெய்...
ஒரு துளி எண்ணெய்...
ஒரு துளி வர்ணம்...
ஒரு துளி சாயம்..
ஒரு துளி கசாயம்...
ஒரு துளி பாயசம்...
ஒரு துளி  ஹார்மோன்...
ஒரு துளி எஸ்சென்ஸ்...
ஒரு துளி குழம்பி...
ஒரு துளி தேநீர்...
ஒரு துளி பண்ணீர்...
ஒரு துளி வாசனை திரவியம்...
ஒரு துளி பசை...
ஒரு துளி வினிகர்...
ஒரு துளி பாணக்கம்...
ஒரு துளி இளநீர்...
ஒரு துளி கஞ்சி...
ஒரு துளி  பாதரசம்...
ஒரு துளி மருந்து...
ஒரு துளி பெட்ரோல்...
ஒரு துளி மண்ணெண்ணெய்...
இப்படியாக தொடரும் இந்த ஒரு துளி...
இவை அனைத்தும்  தன் அளவில் ஆதிக்கம் செலுத்தினால் இப்பிரபஞ்சத்தை காக்க கடவுளாலும் முடியாது.