பக்கங்கள்

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

தலையெழுத்தாக மாறிப்போன தலையாய எழுத்து

                                                             
ஜனிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் 
இவ்வுலகம் எப்படியென்று ஒரு போதும்
தெரிவதில்லை.

இவ்வுலகம்...
.சிகப்பு கம்பளம் விரித்து தன்னை மலர்
  தூவி வரவேற்க போகிறதா?
  அல்லது
.மர்மங்களை முன்னிறுத்தி தன்னை     
  மிரள வைக்க போகிறதா?
  இல்லை
.ஏதும்  புரியாத ஒரு காட்சிபேழையாய்  மட்டும் தன் முன் தோன்ற
  போகிறதா?

என்ற கேள்விகளுடனே  துவங்குகிறது அதன் பயணம்.
இக்கணம் , உள்ளூர  எனக்கு தோன்றுவது என்னவென்றால்...
"இது எதோ முகவரி இல்லாத ஒரு ஊருக்கு அவ்வுயிர்  செய்யும் ஒரு தலையாய பயணம் மென்று"

ஜனித்த காரணத்திற்கான ஒரு மாபெரும் தேடல் என்று கூட கூறலாம்.
. இந்த பயணத்திற்கான பயணச்சீட்டு எங்கே கிடைக்கும்?
. அதன் விலை தான் என்ன?
 . எங்கிருந்து  எப்பொழுது  புறப்பட வேண்டும்?
எவரிடம் அனுமதி பெறவேண்டும்?
என்ன உடை அணிய வேண்டும்?
. பயண நாட்களும், தூரமும்  தான் என்ன?
. பயணிக்க போகும் வாகனம் எப்படி இருக்கும்?
. தனியாக தான் பயணிக்க வேண்டுமா இல்லை எவரேனும்
    வழிகாட்டி  உண்டா?
. அவர் எப்படிபட்டவர் மற்றும்  என்ன மொழியில் பேசுவார்?
. சந்திக்க போகும் நபர்கள் எத்தனை ?
அவர்கள் அனைவரும் எப்படி இருப்பார்கள்?
. அவர்கள் அனைவரும் எப்படி நடந்து  கொள்வார்கள்?
.  பயணம் எப்படி இருக்கும்?
.  இடையே ஓய்வு உண்டா?
. ஓய்வு எடுக்கும் இடம் தான் எங்கே?
பயணத்தின் முடிவு எப்படி தான் இருக்கும்?

இப்படியாக ஜனிக்கும் உயிரின் ஆழ்மனதினுள்  தொடரும் அனைத்து கேள்விகளுக்கும்....

இப்பிரபஞ்சத்தை படைத்தவன் வாய் முகூர்த்தமாக பதில் கூறாமல்
ஜனிக்கும் உயிரை தாங்கும் சரீரத்தின்  தலையில் அவன் எழுதி வைத்தது தான் தலையெழுத்து.

இந்த தலையெழுத்து தான் இவ்வுலகில் ஒரு உயிர் ஜனித்த
காரணத்திற்கான தேடலைத்(அதன் வாழ்க்கையை) தீர்மானிக்கிறது.
ஜனனத்திற்கும் மரணதிற்குமான  கால அவகாசம் அதனிடமே உள்ளது.


அதன் கையில் ஒரு உயிரின் வாழ்கை என்பது கணிக்க முடியாத ஒரு சதுரங்க ஆட்டம் தான் இல்லையா? 

நிகழகூடியவை சந்தோஷமாக இருப்பதும் துக்கமாக இருப்பதும் தலையெழுத்தின் கையில் தான் உள்ளது.

ஏனோ தெரியவில்லை...
தனக்கு ஏற்படும் அனைத்து  துரதிஷ்டமான நிகழ்வுகளுக்கும்  மட்டும்  
தலையெழுத்தை காரணமாக குறிப்பிடும்போது, தனக்கு ஈற்படும்
அனைத்து சந்தோஷமான நிகழ்வுகளுக்கும் அதுவே காரணமென்று ஏற்று கொள்ள இந்த மனது முன்வருவதில்லையே. ஏன் ?

இந்த தலையெழுத்து என்ன நமக்கு துன்பத்தை மட்டுமே கொணர்கிறதா?
இல்லை,..

இன்பத்தையும் தான் என்பதை மறந்து விட கூடாது.

ஜனிக்கும் ஒவ்வொரு உயிரின் தலையிலும் படைப்பவன் எழுதும் தலையெழுத்து என்ன தெரியுமா?

"உன்னால் முடியும்" என்ற வலிமை பொருந்திய இரண்டெழுத்து
 மந்திர சொல்லை தான்.

இதை  தலையெழுத்து என்று குறிப் பிடுவதை விட  தலையாய எழுத்து என்று குறிப்பிடுவது பொருத்தமாக  அமையும்.

இங்கு ஒரு பொதுவான நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளிக்கு செல்ல தயாராக இருக்கும் சிறு குழந்தைகளை நாம்  சற்றே
வீட்டில் உற்று கவனித்தால் புலப்படும்.அவர்களுக்கு உயரத்தில் இருக்கும் பொருட்களின் மீதே நாட்டம் அதிகம்  இருக்கும்.தனக்கு அந்த உயரம் எட்டாததாக இருப்பினும் ஏதேனும் ஒன்றின் மீது  ஏறி நின்று உயரே தன்னை கவர்ந்த அந்த பொருளை கைகொள்ள முயற்சிப்பார்கள்.
ஏன் தெரியுமா?  உன்னால் முடியும் என்ற  தலையாய எழுத்து
அவர்களை உசுப்புவதால் தான்.

ஆனால்...

இதனை கவனிக்கும் தாய்மார்களோ  அவர்களின் முதுகில்
இரண்டுகொடுத்து உன்னால் முடியாது போ என்று 
அவர்களின்  முடியும் என்ற மந்திர  சொல்லைமுடியாது என்ற
எதிர்மறை சொல்லாக அந்த சிறு வயதிலேயே மாற்றி விடுகிறார்கள்.

இதே போல்,மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சிறு  குழந்தைகளை ஈர்க்கும் மற்றொரு பொருள் இருசக்கர வாகனம்.
தனது தந்தை இருசக்கர வாகனத்துடன் வெளியில் செல்ல முற்படும் பொது தானாக ஓடிவந்து ஏறி உட்கார்ந்துகொண்டு இரு கைபிடிகளையும் பிடித்துகொண்டு ஓட்டுவதற்கு முயற்சிப்பார்கள்.  உன்னால் முடியும் என்ற அந்த தலையாய எழுதுத்தின் உந்துதலால்,

ஆனால் தந்தைமார்களோ  அதெல்லாம் உன்னால் முடியாதென்று கீழே இறக்கி விடுவார்கள்.அங்கேயும் அவர்களின் முடியும் என்ற நம்பிக்கை முடக்கப்படுகிறது.

கால போக்கில் முடியும் என்ற தலையாய எழுத்து , முடியாது என்ற தலையெழுத்தாக மாறி போய்விடுகிறது.

அவர்கள் வளந்த பிறகு அவர்களால்முடியகூடிய 
அனைத்து விஷயங்களும் முடியாமலே போய்விடுகிறது.

இத்தனைக்கும் காரணமாக பெற்றோர்களே 
இருந்துவிட்டு குழந்தை வளர்ந்த பிறகு உன்னால் 
எந்த ஒரு விஷயமும்   முடிவதில்லையே  என்று
ஆதங்கப் படுவதில் எந்த ஒரு பிரயோஜனமும்
இல்லை என்பது என் பக்க வாதம்.

ஒரு கணம் அனைத்து பெற்றோர்களும் இதை
சிந்தித்து பாருங்கள் உங்கள் குந்தைகள் உங்கள்
வசப்படுவார்கள் எந்த வயதிலும்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக