பக்கங்கள்

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

உலகின் ஏழு அதிசயங்கள்.


1. பார்க்கும் திறன்

2. கேட்க்கும் திறன்

3. தொடும் திறன்

4. சுவை உணர்வு

5. பேசும் ஆற்றல்

6. சிரிப்பு

7. அன்பு

இத்தனை அதிசயங்களும் உள்ள நீ ஒரு மாபெரும் அதிசயம் தானே.

அற்புதத் தீவு

  அது ஒரு அற்புதத் தீவு.
 
  மனித உணர்வுகளுக்கான தீவு.
 
  அன்பு ,செல்வம் ,அழகு , மகிழ்ச்சி போன்ற
 
  மனித உணர்வுகள் மட்டுமே குடியிருந்தன.
 
  ஒரு நாள்...
 
  அந்த தீவு மூழ்கிவிடும் அபாயம் ஏற்பட்டது.
 
  ஒவ்வோர்  உணர்வும் படகு செய்து கொண்டுப் புறப்பட்டன .
 
  அன்புக்கு மட்டும் படகு இல்லை .
 
  "செல்வமே! என்னை ஏற்றிக்கொள்வாயா?" அன்பு கேட்டது .
 
   "என் படகில் நிறைய தங்கம்,வைரம் மற்றும் பணம் இருக்கிறது
 
   உனக்கு இடம் இல்லை"என்று செல்வம் சென்றது .
 
   "அழகே ! என்னை ஏற்றிக்கொள்வாயா ?" அன்பு  கேட்டது.
 
   " நீ  ஈரமாய் இருக்கிறாய் என் படகின் அழகு போய்விடும்".
 
    என்று அழகும் சென்றது.
 
    கடைசியாக...
       
    "மகிழ்ச்சியே! நீயாவது என்னை ஏற்றிக்கொள்வாயா ?" அன்பு கேட்டது.
 
    மகிழ்ச்சியின் காதுகளில் அது விழவே இல்லை.
 
    அன்பு தவித்தது தனிமையில்.
 
    ஒரு படகு அன்புக்கு அருகே வந்து நின்றது.
 
    "ஏறிக்கொள் அன்பு !" என்றது  ஒரு முதிர்ந்தக் குரல் .
 
    கரையோரம் இறங்கியதும்,அன்பு முதிர்ந்தக் குரலிடம்  கேட்டது
 
    "நீங்கள் யார்?" என்று .
 
.   "நான் தான் காலம்!" என்று பதில் வந்தது.
 
     ஆம்...
 
     அன்பின் முக்கியத்துவத்தை காலம் தான் அறியும்.

சனி, பிப்ரவரி 23, 2013

தேடுகிறேன் இன்னும்...

ஒவ்வொரு நாளும் எனது பணி  முடிந்ததும்
 
எனது  கால்கள் என்னிடம் சிறிதும் அனுமதி கேட்க்காமல் வேகமாக 
 
நான் பணி புரியும் கல்வி நிறவனத்தின் எதிரே உள்ள டீ கடையில் 
 
தான் போய்  நிற்கும் .
 
என்  உதடுகளோ என்னை கேட்காமல் டீ கடைக்காரரிடம்  ஒரு கப் 
 
சுடு தண்ணி  போடச்சொல்லி  சாந்தமாய் முனுமுனக்கும்.
 
அவர் கடை காபியை நான் அப்படிதான் கூறுவேன்.
 
எனது வலது கை தானாகவே "முறுக்கை "தேடிச்செல்லும்.
 
மாலையில்  காபியுடன் முறுக்கும் சேர்த்துக்கொள்வது எனது வழக்கம்.
 
ஒரு கையில் காபி ,மற்றொரு கையில் முறுக்கு.
 
என் மனம்  லயத்துப்போகும் இன்றைய பனி முடிந்ததற்கான ஒரு பெரு மூச்சுடன்.
 
அன்று மாலை ஏனோ என் மனம் லெமன் டீ குடிக்க தூண்டியது.
 
அதற்காக,டிப்டாப்  டீ கடைகள்  உள்ள பக்கத்துக்கு ஊரான பவானிக்கு
 
எனது இருசக்கர வாகனத்தில்சுமார்  பதினைந்து நிமிடங்கள் பயணித்தேன்.
 
கண்ணில் பட்டது அந்தியூர் முக்கில் உள்ள வேலா  பேக்கரி. 
 
உள்ளே சென்று மாஸ்டரிடம் "ஒரு லெமன் டீ" என்றேன் சன்னக்குரலில்.
 
பின்பு ,கடைக்கு வெளியே பார்த்தவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.
 
என் கண்கள் வெளியே போவோர் வருவோர்களை நோட்டமிட்டு
 
அவர்களின் நடை உடை பாவனைகளை களை அளவிட்டுக்கொண்டிருந்தது.
 
எனக்குத் அதுவரை  தெரியவில்லை அவர்களில் ஒருவர் தான்
 
என் மனதிற்கு அன்று சாட்டையடி கொடுக்கப்  போகிறார் என்று.
 
சற்றும் எதிர் பாராமல் நடந்தேறியது அந்த நிகழ்வு.
 
ஆம்,என் கண்ணில் பட்டார் ஒரு மூதாட்டி.
 
இல்லை.அவர் கண்ணில் நான் பட்டேன் என்பது தான் சரியானது.
 
பஞ்சுமிட்டாய் தலை,ஒரு கையில் அழுக்கு துணி மூட்டை,மறுக்கையில் ஊன்றி  
 
நடக்க ஒரு தடி,கண்களில் ஒரு சோகம்,விடைகொடுக்க இருக்கும் சரீரம்.
 
ஏனென்று தெறியவில்லை,ஒரு கணம் உற்று பார்த்துவிட்டு படியேறி பேக்கரிக்குள்
 
என் அருகே வந்தார்.
 
ஒருகணம் தடுமாறிய நான் சில்லறை எதிர்ப்பார்க்கிறாரோ என்று
 
எண்ணி இரக்கப்பட்டு கையை  என் சட்டை பையினுள் விட்டேன்.
 
சில்லறையுடன் அவர் பக்கம் திடும்பினேன்.
 
ஆனால்...
 
அவரோ என்னை கடந்து சென்று மாஸ்டரிடம்  சில்லறை கொடுத்து 
 
ஒரு கப் டீ கேட்டார். 
 
என் புத்திக்கு தெரியவில்லை அவருடைய தேவை சில்லறை அல்ல
 
ஒரு கப் டீ தான் என்று.
 
ஊடே, நான்  கேட்ட லெமன் டீ என்  மேஜைக்கு வந்தது.
 
ருசிப்பார்க்க தவித்தன என் உதடுகள்.
 
நானும் தாமதிக்காமல் குடிக்க தயாரானேன்.
 
மீண்டும் அதே மூதாட்டி என் அருகில் தான் வாங்கிய ஒரு கப் டீ யுடன்.
 
ஏதும் பேசாமல் என்னிடம் நீட்டினார்.
 
நான் வாங்கிக்கொள்ள தயங்கினேன்.
 
என்ன நினைத்தாரோ தெரியவில்லை மேஜையின் மீது வைத்து விட்டு
 
என்னிடமிருந்து விடை பெற்றறார்.
  
என்னைச்  சுற்றி  இருந்தவர்களின் பார்வை என் மீது பற்றிகொண்டது
 
சிறுது நேரம்.
 
சாட்டையால் என்னை அடைத்தது போல இருந்தது எனக்கு.
 
ஆம்,பிச்சை கொடுக்க போன நான் பிச்சைகாரனாகிப் போனேன்.
 
அக்கணம் நான் அப்படி எண்ணியது தவறு தான்.
 
பிறகு ஏன் அவர் எனக்கு டீ வாங்கி தரவேண்டும்?
 
என்னுள் எழுந்த இந்த கேள்விக்கு பதில் தான் என்ன.
 
தேடுகிறேன் இன்னும்...
 

ஞாயிறு, பிப்ரவரி 10, 2013

எனக்குப் பிடித்தவைகள்...

. இதுவரை நான் செய்யாத விமானப்பயணம் 
 
    பலமுறை செய்தாலும் வெறுக்காத என் சைக்கிள் பயணம்.
. இதுவரை நான் அணியாத ஜீன்ஸ் பேன்ட்.
 
   பலமுறை அணிந்தாலும் எனக்கு பொருந்தும் காட்டன்

   பேன்ட்.
. இதுவரை நான் பார்க்காத டார்ஜிலிங்.
 
   பலமுறை பார்த்தாலும் என் கண்ணுக்குளே நிற்கும் ஊட்டி.
. இதுவரை எனக்கு கிட்டாத விஞ்ஞானப் பணி .
 
   பலமுறை என்னை மேம்படுத்தும் இப்போதுள்ள கற்பிக்கும் பணி.
.இதுவரை நான் நேரில் பார்க்காத சூப்பர் ஸ்டார்.
 
  பலமுறை பார்த்தாலும் நான் சலிப்படையாத எனக்கு மிகவும்

  நெருக்கமானவர்கள் .
.இதுவரை நான் முழுமையாக கற்றுக்கொள்ளாத தேசிய மொழி.
 
  பலமுறை பேசினாலும் என்னை மேலும் ஈர்க்கும் என் தாய் மொழி.
.இதுவரை நான் வரையாத மைசூர் கண்ணாடி ஓவியம்.
 
  பலமுறை வரைந்தாலும் என்னை ஆச்சரியப்படுத்தும் தஞ்சாவூர் ஓவியமும்.
.இதுவரை நான் வெளியிடாத புத்தகம்.
 
  பலமுறை எழுதினாலும் புத்துணர்வு ஊட்டும் நான் எழுதும் இடுக்கைகள்.
 
 இதையும் தாண்டி...
.எழுந்தே ஆகவேண்டும் என்று தெரிந்தும் எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும்

 கூடுதலான  இரண்டு நிமிட உறக்கம்.
.உறங்கி எழுந்த பின்னும் படுக்கையை விட்டு நகராமல் உருள வைக்கும்
 பாம்புச் சோம்பல்.
. பல் துலக்காமல் அருந்தும் ஒரு கப் காபி.
.தலைப்புச் செய்திகள்.
. குளியலறையில்,எனக்கே தெரியாமல் என்னை முணுமுணுக்க வைக்கும்

   ரஹ்மானின் பாடல்கள்.
.என்னுடைய காலை பரபரப்பில் எப்படியும் தோற்கப்  போகிறோமென்று தெரிந்தும் என்னுடன்

  மல்லுக்கட்டும் கடிகார முள்.இதுவே மறுநாளும் தொடருமென்ற வெற்றிக் களிப்பில்
 
  என் உதட்டோரப்  புன்னகை.
.மித ஓட்டத்தில்  நகர பேரூந்தைப் பிடித்து  படிக்கட்டில் நின்று கொண்டு முகத்தில் காற்று பட
 
  செய்யும் ஒய்யாரப் பயணம்.
. வழியில் என்னை நிலைக்கொள்ளாமல் செய்யும் பிண ஊர்வலத்தின் முன் அரங்கேறும் 

   நிலையில்லா தமிழகத்து சால்சா நடனம்.
. மதிய உணவாக எப்பொழுதும் புளி கொழம்புச் சாப்பாடு  முட்டை ஆம்லேட்டுடன்  .
.மாலையில்   ஒரு கப் காபியுடன் முறுக்கு.
.இரவில்  சப்பாத்தி  தொட்டுக்கொள்ள ஊறுகாய் .