பக்கங்கள்

திங்கள், அக்டோபர் 10, 2011

மரணம் எனது பார்வையில்



 மரணம் ....     
 .    நாம் சுவாசிக்க மறந்த தினம். 
 .   இத்துணைகாலம் நம்முடைய எல்லா   எண்ணங்களுக்கும் 
      தகுந்தாற்போல் தன்னை ஆட்படுத்திக் கொண்ட 
      நம்சரீரதிற்கான ஒரு பிரிவு உபச்சாரவிழா.

மரணம்....
எவரும் எதிர்கொள்ள 
    விரும்பாத ஒரு வினை..
நிச்சயக்கபடாத ஒரு நிகழ்வு.

இவ்வுலகில் பிறக்கும் எப்பால் இனத்தவரும் தம் மரணத்தை
ஏற்று கொள்ளவதில்லை.

சற்றே கற்பனை செய்து பாருங்களேன்...

நாம் பயணிக்கும் விமானம் திடீரென்று இரண்டாக பிளந்து,
ஒராயிரம் அடி உயரத்திலிருந்து நாம் கீழ் நோக்கி விழுந்தால்
எப்படி இருக்கும்?

மரண  பயத்தை ( தேதி  குறிக்கபட்ட மரண தண்டனை கைதியிடம்
கேட்டு பாருங்கள்)  ஒவ்வொரு நொடி பொழுதும் நமக்கு தெரிய படுத்தி கொண்டிருக்கும் நாம் இனிக்க இனிக்க வாழ்ந்த இதே உலகம், இல்லையா?

நம் கண் முன்னே நம் உயிர் பிரிவதை எதிர்கொள்ளும் சக்தி
நம்மிடம் இல்லை என்பது அப்பொழுதுதான் புலப்படும்.

இதே போல்....

உங்களுடைய ஆயிசு இன்னும் ஒரு வார காலமேயென்று
எவரேனும் கூறினால் உங்கள் மனநிலை தான் என்ன?
. நெஞ்சு பதபதைக்கும்.
. இருப்பதெல்லாம் இல்லாதது  போலவும், இல்லாதவையெல்லாம்
    இருப்பது போலவும் உள்ளூர  ஒரு உணர்வு பற்றிகொள்ளும்.
. அன்றுவரை சுவாசிப்பதையே உணராத நீங்கள் உணர முற்படுவீர்கள்.
. உடல் உறுப்புகள் அனைத்தும் இருப்பதாக உணர நேரிடும்.

    (ஒரு நாள் முழுவதும் நீங்கள் சுவாசிப்பதாகவும் எல்லா உறுப்புகளுமே
     உங்களுக்கு  இருப்பதாக  உணர்ந்து தான் பாருங்களேன் பார்க்கலாம்.
     அன்றைய பொழுது நரகமாக மாறிபோகும்.)
. இருக்ககூடிய நாட்கள் நம்மளுடையதாக இருக்காது.
. எவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ள இயலாது.
. உணவு என்ற ஒன்று அவசியம்தானா என்ற கேள்வி எழும்.
. உறக்கம் உங்கள் கைவசம் இல்லாமல் போகும்.
. பிடித்த அத்துனை விஷயங்களும், நபர்களும் நமக்கு பிடிக்காமல் 
    போகக் கூடும்.

இவை அனைத்தையும் விலக்கி  வைக்க, தனிமையை தேடி சென்றால்..

அந்த தனிமையும்  சற்று அதிகமாகவே மிரட்டும்.

மொத்தத்தில் எஞ்சிய சந்தோஷமான தருணங்களை இழந்து
நாம்  நாமாக இருக்க இயலாமல் போகிவிடும்.

ஒரு மனிதன் சந்திக்கும் மரணத்தை இவ்வாறெல்லாம் வகைபடுத்தலாம்.
.  வயது முதிர்வினால் ஏற்ப்படும் இயற்கை மரணம்.
.  விபத்து போன்ற  எதிர்பாராத மரணம்.
.  நோய்வாய்ப்பட்டு இரத்தல்.
.   கூட்ட நெரிசலில் உயிர் பிரிதல்.
.   இயற்கையின் சீற்றத்தினால் மரணத்தை எதிர்கொள்ளுதல்.
.   போர்களத்தில் உயிர் பிரிதல்.
.   விலங்குகளுக்கு பலியாகுதல்.
.   என்கவுன்ட்டர் போன்ற துப்பாக்கி சூட்டில் உயிர் விடுதல்.
.   கொலை செய்யப்படுதல்.
.   மரணதன்ன்டனை விதிக்கப்பட்டு உயிர் நீத்தல்.
.   கருணைக்கொலை செய்யப்படுதல்.
.   தற்கொலை செய்துக்கொள்ளுத்தல்.
.   சிசுக்  கொலை.
.   கருகலைப்பு.

நம் உயிர் பிரியும் நாளை முன்னதாகவே  நம்மால் கணிக்க இயலுமா?

சாத்தியமென்றால்....

நாம் அனைவரும் நம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு இறப்பு அழைப்பிதழை
அனுப்பி வைக்கலாம் அல்லவா!

ஜனனமும்,மரணமும் ஒரு வகையான நிகழ்வுகளே.

ஜனனம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும் சந்தொஷங்களுக்கிடையே 
அழுது கொண்டே இவ்வுலகிற்கு விருந்தாலியாக காலடி வைத்தல்  .

மரணம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும்  சொகங்களுக்கிடையே அமைதியாக இவ்வுலகிலிருந்து விடைபெற்று கொள்ளுதல்.

ஜனனத்தின் அழுகுரல் இவ்வுலகை கண்டு மிரளுவதர்க்கான வெளிப்பாடு.

மரணத்தின் அமைதி இவ்வுலகை விட்டு விடுதலையாகுவதர்க்கான வெளிப்பாடு.

ஜனனத்தை பெருமிதமாய் ஏற்றுக்கொள்ளும்  நாம் மரணத்தையும் அப்படியே ஏற்று கொள்வோமே!

நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளையும் மனதார நேசியுங்கள்.

மரணம் ஒரு போதும் உங்களை ஒரு கொடுவாவை கொண்டு மிரட்டாது.

மாறாக, அது ஒரு பூங்கொத்தை கொண்டு இனிதாய் வரவேற்கும்.




4 கருத்துகள்:

  1. சாவார நாள் தெரிஞ்சுட்ட வாழ்ற நாள் நரகம் ஆயிடும் என்பது உண்மை தான் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //ஜனனத்தின் அழுகுரல் இவ்வுலகை கண்டு மிரளுவதர்க்கான வெளிப்பாடு.

    மரணத்தின் அமைதி இவ்வுலகை விட்டு விடுதலையாகுவதர்க்கான வெளிப்பாடு.//

    அருமயான வரிகள் ஆனது பதிவுகளும் அருமை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. முக்கால்வாசி நபர்கள் மரணம் குறித்து எழுதாமல் இருப்பதில்லை, அப்படி பட்ட பதிவுகளுக்கு என் கருத்து ஒன்றே ஒன்று தான்...

    வாழ்வதற்காக சாகும் நீ...
    செத்த பிறகும் வாழப் பார்..

    பதிலளிநீக்கு