பக்கங்கள்

வியாழன், நவம்பர் 03, 2011

உனக்காக...

மன இறுக்கத்தில்  இருக்கும் உனக்கு
நான்(உலகம்) உதிரும் சில வரிகள்.

வெளியே மழை ...

ஒற்றை ஜன்னல்...

இருள் சூழ்ந்த கூடாரம்...

நீ மட்டும் தனிமையில்...

கண்களில் ஆட்பரிக்கும்  நயாக்ராவோடு.

சற்றே வெளியே வா ...

உன்னுடைய மனப்போராட்டத்தை 
என்னிடம் பகிர்ந்துகொள்.

என்னை ஒரு குப்பை தொட்டியாக நினைத்து உன் மனதை தைக்கும் விஷயங்களை  என்னிடம் கொட்டிவிடு.

உன் நிலை புரிந்து...

நீ ஏன் இப்படி? என்று நான் உன்னை கேட்டதை காட்டிலும்
நான் ஏன் இப்படி? என்று நீயே உன்னை கேட்கும் பொழுது தான் 
உன் மனத்தினுடைய  வலி என்னை அதிகமாக கனக்க செய்கிறது.

உன்னுடைய தோல்வி(இழப்பு) உன்னையே உனக்கு புரிய வைக்க
ஒரு சந்தர்ப்பமே.

இழப்புகள்  இல்லா  மனிதன் இவ்வுலகில் இல்லை.

இழப்புகள் இல்லை  எனில் அவன் தன் வாழ்நாளில் எந்த ஒரு
செயலையும் செய்ய  முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.

இவ்வுலகில் மோசமான  ஒன்று என்னவென்றால் உன்னையே நீ
தாழ்த்தி கொண்டு வருத்தப்படுதல் தான்.

வலி  கண்டு விரக்தி கொள்ளாதே...


சூழல் ஒருபோதும்  உன்னை  உருவாக்குவதுமில்லை,
காயப்படுத்துவதுமில்லை.

எனது பெரிய மாற்றத்தை உன்னிடமிருந்தே  எதிர்ப்பார்க்கிறேன்.

இதோ உனக்கான என் வார்த்தைகள்...
. மற்றவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை தேர்ந்தெடுக்கட்டும்.

    நீ அல்ல...
மற்றவர்கள் சற்றும் பொருந்தாத  விஷயங்களுக்காக
    விவாதம் செய்யட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் சிறு வருத்தங்களுக்காக  கண்ணீர் சிந்தட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் தங்களது வாழ்க்கையை பிறர் கையில் ஒப்படைக்கட்டும்.

    நீ அல்ல...


சந்தோஷம் என்பது நீ எப்படி இருக்கிறாய்,கையில் என்ன கொண்டுள்ளாய்
என்பதிலில்லை.நீ என்ன நினைக்கிறாய் என்பதில் தான்.


உன்னை  சார்ந்தவர்களால்  காலம் தாழ்த்தி வரும் சந்தோஷத்திற்காக காத்திராதே.

இன்றே,ஒவ்வொரு கணப்பொழுதின்  சந்தோஷத்தையும்
உன்னுடையதாக ஆக்கிகொள்.

இல்லையேல்...

இன்றிலிருந்து இருபது  வருடங்கள் கழித்து வருத்தப்பட  கூடும்
இன்று  நீ வாழ மறந்த வாழ்க்கை நினைத்து.

இவ்வுலகில் உனக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே.
அது கையில் உள்ள உன்னுடைய இப்போதைய வாழ்க்கையே.

முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில்  மட்டுமே காணப்படும்
ஒரு வார்த்தை.

உனது வெற்றியின் முதல் ரகசியம் உன் மீது  நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை விட உன் மீது நீ வைத்திருக்கும் விருப்பமே.

உன்னால் முடிந்த விஷயங்களை செய்ய துவங்கும்போழுது
உனக்கான வெற்றி உறுதி.

காலம் தாழ்த்தாதே,இன்றே துவங்கு..

எவருடைய வாழ்க்கையிலும் "முக்கியமில்லா நாள்" என்ற ஒன்று கிடையாது.

ஒன்று தெரியுமா?

நீயும்  நானும்  மட்டுமே முடிவில்லா வாய்ப்புகளை உருவாக்க
பிறந்தவர்கள்.

நாம் இருவர் மட்டுமே அனைத்து வாய்ப்புகளும்  சாத்தியமாகும் உலகில் வாழ்கிறோம்.

எனவே அனுபவங்களை சேமித்து வை.

அவமானங்களை அல்ல.

ஒரு நாளில் மூன்று முறையாவது இன்று உனக்கு எது முக்கியமானது என்று உனக்குள் கேட்டுப்பார்.அன்றைய தினத்தின் முக்கியத்துவம் புலப்படும்.

எளிமையாக நடந்த்துகொள்.அது தான் உன்னை நிலைபடுத்தும்  உன் அறிவின் சாவி.

முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஒரு போதும் தன் மரணம் கண்டு அஞ்சுவதில்லை.

 எனவே,உன் இழப்புகளை தவிர்த்து கடைசி நிமிடம் வரை உன் வாழ்க்கையை உன் வசப்படுத்து.

2 கருத்துகள்:

  1. தோல்வியில் படுத்து அழுபவரை தட்டி எழுப்பும் எழுச்சி மிக்க கவி வரிகள்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அறிவின் சாவி எளிமை அல்ல, மீள் கற்றல் என்பது என் எண்ணம்... தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்... ஒரு வேளை எளிமை தான் மீள் கற்றலுக்கு வழி வகுக்குதோ?

    பதிலளிநீக்கு