பல நாட்களாகவே எனக்குள் முரண்பாடாக தோன்றும் இரு தமிழ் வார்த்தைகள்.
1. அதிர்ஷ்டம்
2. வாய்ப்பு
வேறுபடுத்த முடியாமல் குழம்பியநாட்கள் தான் அதிகம்.
உங்கள் பார்வையில் அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பு, எப்படி?
இரண்டும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?
என் சிந்தனை வசபட்ட இந்த நிகழ்வை கடந்த பிறகு உங்கள்
பதிலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு கிராமம்.
மக்களின் உள்ளம் கவர்ந்த ஒரு நிலக்கிழார்(ஜமீந்தார்).
அவருக்கு ஒரு அழகான மகள்(அனைத்து அம்சங்களுடன்).
அவளுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் ஒரு சராசரி
குடும்பத்தை சேர்ந்த இளைஞன்.
கால சக்கரத்தின் சுழற்சியால் அவள் அவன் கண்ணில் பட.
அவளை மணம் முடிக்க எண்ணினான்.
மறுகணமே அவனது கால்கள் நிலக்கிழார் முன் போய் நின்றது.
தன் விருப்பதை வெளிப்படுத்தினான்.
ஒரு கணம் திகைத்தாலும், அவனுடைய தைரியத்தை கண்டு
சம்மதம் தெரிவித்தார்.
ஆனால்,ஒரு நிபந்தனையுடன்.
என்னவென்றால்...
அவர் வளர்க்கும் மூன்று காளை மாடுகளில் ஏதேனும் ஒன்றை அடக்கி அவனுடைய வீரத்தை நிரூபிக்க வேண்டும்.
அதாவது மூன்று வாய்புகள்.
இல்லையேல்...
அவனுடைய ஆசை நிறைவேறாது.
இவனும் ஏற்று கொண்டு தயார் ஆனான் அந்த தருணத்திற்காக.
அந்த நாள் வந்தது.
ஒரு பெரிய மைதானம்.
ஒரு புறம் இந்த இளைஞன்.
மறுபுறம் கொம்பு தீட்டப்பட்ட மூன்று காளை மாடுகள் ஒன்றன்
பின் ஒன்றாக ஆக்ரோஷத்துடன்.
சுற்றிலும் கிராம மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன்.
மணி ஒலிக்க...
முதல் காளை இவனை நோக்கி விரைந்தது.
தனது மொத்த பலத்தையும் கையில் கொண்டு அதனை
எதிர்கொள்ள நினைத்தான்.
அதன் கூரிய இரு கொம்புகள் இவன் கண்ணில் பட, விலகி கொண்டான் பயத்தில்.
முதல் வாய்ப்பை நழுவ விட்டான்.
இப்பொழுது...
இரண்டாவது காளை இவனை நோக்கி விரைந்தது.
சற்றே, அதிகமான பலத்துடன் அதனை எதிர்கொள்ள நினைத்தான்.
இம்முறை, அதன் சீரும் கண்கள் இவனை மிரள வைக்க,
விலகி நின்றான்.
இரண்டாவது வாய்ப்பையும் நழுவ விட்டான்.
அவன் மனம் பதைபதைத்தது.
அப்பெண்ணின் முகம் இவன் முன் வந்து சென்றது.
செத்தாலும் பரவா இல்லை, எப்படியாவது அந்த கடைசி
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கிறான்.
அதன்படி சீறி வரும் அந்த மூன்றாவது காளையை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணி பாய்ந்து அதன் வாலை
பிடிக்க முற்படுகிறான்.
அவன் துரதிஷ்டம், அந்த காளைக்கு வால் இல்லை.
தோல்வியான முகத்துடன் விடைபெறுகிறான்.
இந்த நிகழ்வின் வாயிலாக நான் கூற முற்படுவது
என்னவென்றால்...
என்னவென்றால்...
ஒவ்வொரு காளையும் ஒரு வாய்ப்பு.
அதனுடைய வால் தான் அதிர்ஷ்டம்.
அவனுக்கு மூன்று வாய்புகள் கொடுக்கப்பட்டது.
முதல் இரண்டு காளைகளுக்கு வால் இருந்தன.
இவன் பயன்படுத்திக்கொள்ள முற்படவில்லை.
வாலை பற்றி கொள்ள எண்ணியபோது,
அந்த காளைக்கு வால் இல்லை.
இப்படி தான் நம்மில் பலர் இச்சமுதாயத்தில் அதிர்ஷ்டத்துடன்
கூடிய வாய்ப்புகளை பற்றி கொள்ள தெரியாமல்
ஓடிகொண்டிருக்கிறோம்.
நமது வாழ்நாளில்,நம் வீட்டுக் கதவை அவ்வப்போது பல வாய்ப்புகள் தட்டுவதுண்டு.
ஆனால்...
அதில் எந்த வாய்ப்பு அதிர்ஷ்டத்தை தாங்கி வருகிறது
என்பதை கண்டறிந்து பற்றிக்கொள்வதில் தான் நம் வெற்றி உள்ளது.
இவன் பயன்படுத்திக்கொள்ள முற்படவில்லை.
வாலை பற்றி கொள்ள எண்ணியபோது,
அந்த காளைக்கு வால் இல்லை.
இப்படி தான் நம்மில் பலர் இச்சமுதாயத்தில் அதிர்ஷ்டத்துடன்
கூடிய வாய்ப்புகளை பற்றி கொள்ள தெரியாமல்
ஓடிகொண்டிருக்கிறோம்.
நமது வாழ்நாளில்,நம் வீட்டுக் கதவை அவ்வப்போது பல வாய்ப்புகள் தட்டுவதுண்டு.
ஆனால்...
அதில் எந்த வாய்ப்பு அதிர்ஷ்டத்தை தாங்கி வருகிறது
என்பதை கண்டறிந்து பற்றிக்கொள்வதில் தான் நம் வெற்றி உள்ளது.
இன்னும் முடியவில்லை போலிருக்கே....
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
பதிலளிநீக்கு