மனித இனத்தைவிலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிப்பதே
அந்த ஆறாவது அறிவு(பகுத்தறிவு) தான்.
பகுத்தறிவுக்கும் மனித மனதிற்கும் நிறைய தொடர்பு உண்டு.
மனித மனத்தின் சூட்சமம்(நிலை) பகுத்தறிவின் பரிமாணங்களில் தான் உள்ளது.
சந்தோசம்,துக்கம்,விருப்பு ,வெறுப்பு,நேசம்,கோபம் போன்ற அனைத்தும்
இந்த பகுத்தறிவின் வெவ்வேறு பரிமாணங்களே.
கட்டுப்பாடின்றி,எல்லையை மனம் கடக்கும் போது தான் பகுத்தறிவு நம்மை விட்டு விலகி சற்றும் பொருந்தாத விலங்குகளுகே ஒப்பான வெளிப்பாடுகள்
உங்களுக்குள் எட்டிப்பார்க்கிறது.
மனதிற்கு இயற்கையான வடிவமோ,நிறமோ அல்லது பாலினமோ இல்லை.
ஆனால் இவை அனைத்தும் பகுத்தறிவின் சாரம் மாறும் போது மனதிற்கு கிடைக்க பெறுகிறது.
குறிப்பாக...
நேசிக்கும்(இது பகுத்தறிவின் ஒரு பரிமாணம்) ஒவ்வொரு ஆணும் தன் மனதை பெண்ணாகவும்,ஒவ்வொரு பெண்ணும் தன் மனதை ஆணாகவும் கற்பனை செய்துகொள்வதுண்டு.அவர்கள் இருவரும் தங்கள் மனதிற்கு
நிறத்துடன் கூடிய வடிவங்களையும் கொடுத்துக்கொள்வதுண்டு.
உங்கள் மனதை சரியாக அளவிட உங்களை தவிர யாராலும் முடியாது.
உங்கள் மனதை முதலில் நேசிப்பதும்,வெறுப்பதும் நீங்கள் தான்.
அதை கட்டுப்படுத்தினால்,அது தான் உங்கள் உற்ற நண்பன்.
அதை கட்டுப்படுத்த வில்லையெனில்,அது தான் உங்கள் முதல் எதிரி.
கட்டுப்பாடில்லா மனதில் தான் பயம் பற்றிக்கொள்ளும்.
பயத்தின் பிடியில் பகுத்தறிவின் நேர்மறை பரிமாணங்கள் எதிர்மறையாக
மாறிப்போவதுண்டு.
அதாவது...
அன்பு(வெறுப்பு), இனிமை(கசப்பு), மகிழ்ச்சி(கோபம்), திருப்தி(பொறாமை) மற்றும் நிறைவு(பேராசை).
இவை அனைத்தும் மனதின் மீதான பகுத்தறிவின் வெளிப்பாடுகளே...
நீங்கள் அன்போடு தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது வெறுப்பு முகம் காட்டுகிறது.
நீங்கள் இனிமையோடு தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது கசப்பு கலந்துவிடுகிறது.
நீங்கள் மகிழ்ச்சியோடு தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது கோபம் தலை தூக்குகிறது.
நீங்கள் திருப்தியோடு தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது பொறாமை ஆட்கொள்கிறது.
நீங்கள் நிறைவோடு தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது பேராசை ஊற்றேடுக்கிறது.
நீங்கள் அழகாக தான் பிறந்தீர்கள்.
அது குறையும் போது தாழ்வு மனப்பான்மை தோள் சாய்கிறது.
இவை அணைத்தும் உங்களுக்குள் ஒன்று சேரும்பொழுது.
உங்களுடைய அழகான வாழ்கையை மனதளவில் சிதைக்கவும்,
வதைக்கவும் செய்து உங்கள் தலையணையை கண்ணீரால் நனைத்து வெளியே வரும்போது மற்றவர்களுக்காக முகப்பூச்சுடன் பொய்யாக புன்னகைகிறீர்கள்.இல்லையா?
முரண்பாடாக வாழ முற்படுகிறீர்கள்.
உதாரணத்திற்கு...
நீங்கள் குளிர்காலத்தில் அனல் மூட்டுகிறீர்கள்.
வெயில் காலத்தில் குளிர்ச்சாதனப்பெட்டியை நாடுகிறீர்கள்.
இல்லாததை தான் மனம் ஈர்க்கிறது.
கிடைகாததற்கு தான் மனம் கிரங்குகிறது.
காணாமல் போனததற்கு தான் மனம் கலங்குகிறது.
உங்கள் மனதை அதன் பாதையில் விட்டு விடாதீர்கள்.
உங்கள் வாழ்வின் தடம் மாறிபொகக்கூடும்.
அதை மென்மையாக கையாளுங்கள்.
நிலைமாறும் தருணங்களில்,உங்கள் இரு கால்களையும் ஓடும் நீரில்
நனைத்து கொண்டு,அமைதியாக சுற்றி தென்படும் இயற்கையுடன் மனதை ஒன்றி யாசிக்க கற்றுகொள்ளுங்கள்.
குளிர்ந்த நீரின் சாரம் உங்கள் உச்சந்தலைவரை பற்றிக் கொள்ளும்.
பூக்களின் வாசம் உங்கள் மனதின் கணத்தைக் குறைக்கும்.
பறவைகளின் சத்தம் உங்களின் செவிகளுக்கு இனிமை சேர்க்கும்.
தூரத்து நீர்வீழ்ச்சி உங்களை கவர்ந்திழுக்கும்.
மௌனம் உங்களை முழுவதுமாக ஆட்கொள்ளும்.
உங்களுக்குள் அதீதமாக ஆற்றல் பெருகும்.
அப்படியே...
ஒரு கணம் உங்கள் விழிகளை மூடி திறந்து பாருங்கள்.
உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வாழ்க்கை உங்கள் வசப்படும்.
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு